திருச்சி, பொன்மலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பணிமனை மற்றும் ரயில்வே குடியிருப்பு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்தது. போலீசார் வாகனத்தை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் சாலையை சேர்ந்த விக்னேஷ்வரன் (21), கீழக்கல்கண்டார் கோட்டை ஆலத்தூரை சேர்ந்த சரண்குமார் (23), அதவத்தூரை சேர்ந்த அரவிந்த் (20), மேலக்கல்கண்டார் கோட்டையை சேர்ந்த விஜய் (20), ராம்பிரசாத் (21) என்பதும், அனைவரும் அப்பகுதியில் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி மாவட்ட 5-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கும்பலைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.