திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே போலீசார் இன்று ( 24.07.2023 ) அதிகாலை 2 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த ஆட்டோவில் 5 பேர் இருந்தனர். ஆட்டோவிற்குள் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது. அதன் பேரில், அவர்கள் 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்டோவில் ஆயுதங்களை எதற்காக எடுத்துச் சென்றார்கள்?, சதி செயலில் ஈடுபட சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.