Rock Fort Times
Online News

40 வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசம்..

திருச்சி மணிகண்டம் அருகே உள்ள ஏசனபட்டியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர், மணிகண்டம் பகுதியில் உள்ள வயல் ஒன்றில் அறுவடை முடிந்த வைக்கோல் கட்டுகளை அவருடைய டிராக்டரில் ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது வயல் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசியது. இதில், டிராக்டரில் ஏற்றப்பட்ட வைக்கோல் கட்டுகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிடத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் டிராக்டரில் இருந்த 40 கட்டு வைக்கோல் மற்றும் டிராக்டரின் டிப்பர், டயர்கள் எரிந்து சேதமானது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்