திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று 4 பேரை பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி தாராநல்லூர் வீரமா நகரை சேர்ந்த கீர்த்திவாசன் (வயது 24), மணிகண்டன் (24), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த
சிவகண்ணன் (26), இபி ரோடு பகுதியை சேர்ந்த புலிதேவன் ( 24), தையல்கார தெருவை சோ்ந்த கேசவன் என்பது தெரிய வந்தது. மேலும், 5 பேர் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டது தெரிய வந்தது. அதன்பேரில், அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தப்பிஓடிய புலிதேவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ரவுடிகள் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 973
Comments are closed, but trackbacks and pingbacks are open.