Rock Fort Times
Online News

கரூரில் விஜய் கூட்டத்தில் 39 பேர் உயிரிழப்பு: புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு…!

கரூர் மாவட்டத்தில் நேற்று( செப்.27) தமிழக வெற்றிக்கழக தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ. மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் சிலர் மீது BNS பிரிவு 105 – (கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை), BNS பிரிவு 110 – (குற்றமற்ற கொலை செய்ய முயற்சி), BNS பிரிவு 125 – (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை) BNS பிரிவு 223 – (பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.) TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்