கரூரில், தமிழக வெற்றிக்கழக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில்மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வருகை தர உள்ளனர்.ஏற்கனவே அவருக்கு மத்திய அரசின் சார்பில் ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வருகை தர உள்ளனர்.

Comments are closed.