Rock Fort Times
Online News

அரசின் திட்டங்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: திருச்சி- விஷ்ணு…!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில்,   தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.  இந்த அதிகாரிகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களை கண்காணிப்பர்.  மேலும், மாதத்திற்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று அரசு திட்ட பணிகளை கண்காணித்து அதன் விளைவுகளை ஆராய வேண்டும். அரசு திட்டங்கள் தொடர்பான செயல்பாடுகள் குறித்த சுருக்க குறிப்புகளை சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு கண்காணிப்பு அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.

மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்:

1.அரியலூர்-இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் எம்.விஜயலட்சுமி

2 செங்கல்பட்டு- சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஏ.ஆர்.ராகுல்நாத்

3.கோயம்புத்தூர்- ஆதிதிராவிடர் நல இயக்குநர் டி.ஆனந்த்

4.கடலூர்- உணவுப்பொருள் வழங்கல் இயக்குநர் டி.மோகன்

5.சென்னை- இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர்

6.தருமபுரி- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி

7.திண்டுக்கல்- தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநர் எஸ்.அனீஷ் சேகர்

8.ஈரோடு- பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் டி.என்.வெங்கடேஷ்

9.கள்ளக்குறிச்சி- நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் பி.மதுசுதன் ரெட்டி

10.காஞ்சிபுரம்- தாட்கோ மேலாண் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி

11.கன்னியாகுமரி- புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் ஹனிஷ் சப்ரா

12.கரூர்- பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,l

13.கிருஷ்ணகிரி- தேசிய சுகாதார திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

14.மதுரை- தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ஏ.அருண் தம்புராஜ்

15.மயிலாடுதுறை- அருங்காட்சியக இயக்குநர் கவிதா ராமு

16.நாகப்பட்டினம்- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் ஏ.அண்ணாதுரை

17. நாமக்கல்- சிறுபான்மையின நல இயக்குநர் எம்.ஆசியா மரியம்

18.பெரம்பலூர்- மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் எம்.லட்சுமி

19.புதுக்கோட்டை- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் இ.சுந்தரவள்ளி

20. ராமநாதபுரம்- தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் எம்.வள்ளலார்

21.ராணிப்பேட்டை- தொழில்துறை சிறப்பு செயலர் மரியம் பல்லவி பல்தேவ்

22.சேலம்- சுற்றுலாத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி

23.சிவகங்கை- மீன்வளத்துறை இயக்குநர் ஆர்.கஜலட்சுமி

24.தென்காசி- தமிழ்நாடு பாடநூல்கழக மேலாண் இயக்குநர் பி.சங்கர்

25. தஞ்சாவூர்- தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் எம்.அரவிந்த்

26. நீலகிரி- ஆவின் மேலாண் இயக்குநர் எஸ்.வினீத்

27. தேனி- போக்குவரத்துத் துறை சிறப்பு செயலர் ஆர்.லில்லி28. தூத்துக்குடி- வேளாண் விற்பனை துறை ஆணையர் ஜி.பிரகாஷ்

29. திருச்சிராப்பள்ளி- தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வி.விஷ்ணு

30. திருநெல்வேலி- டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி

31. திருப்பத்தூர்- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி

32. திருப்பூர்- தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் எல்.நிர்மல்ராஜ்

33.திருவள்ளூர்- சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா

34.திருவண்ணாமலை- கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப்

35. திருவாரூர்- கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் பதிவாளர் – பி.காயத்ரி கிருஷ்ணன்

36.வேலூர்- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநர் கே.விஜயகார்த்திகேயன்

37. விழுப்புரம்- போக்குவரத்து ஆணையர் சுஞ்சோங்கம் ஜடக் சிரு

38. விருதுநகர்- கைத்தறி ஆணையர் ஏ.சண்முக சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்