திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை…. மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த கந்தன் என்பவரின் மகன் சங்கர் (வயது 32)என்பவர் கடந்த 17- 12- 2019 அன்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு சங்கர் மீது கடந்த 11- 3- 2020ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று (19-9-2023) தீர்ப்ப ளிக்கப்பட்டது. இந்த வழக்கில் சங்கருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜாகிர்உசேன் வாதாடினார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த அப்போதைய ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் தற்போதைய பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகா மற்றும் போலீசாரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பாராட்டினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.