தமிழ்நாடு காவல் துறையினருக்கு ஆண்டுதோறும் நடைப்பெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் சென்னை யில் உள்ள காவல் உயர்
பயிற்சியகத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். இதில் கொலை வழக்கு ஒன்றில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருச்சி மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் ஸ்ரீதருக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மற்றும் காவல்படை தலைவரால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றினை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் ஸ்ரீதருக்கு வழங்கி தனது பாராட்டு தெரிவித்தார். தேபோல, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா, மாநில அளவில் தடய அறிவியல் பிரிவில் வெள்ளி பதக்கம், தடய மருத்துவவியலில் வெண்கல பதக்கம் என மொத்தம் 2 பதக்கங்களை வென்று காவல்துறை தலைவரால் பாராட்டு சான்றினை பெற்றார். அவரையும், திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 968
Comments are closed, but trackbacks and pingbacks are open.