தஞ்சாவூர் அருகே விபத்தில் இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு வழிபாட்டிற்காக கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்த சுற்றுலா வாகனம் இன்று அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூர் கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் லில்லி (வயது63) மற்றும் ரியான் (வயது9) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் கடும் காயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மெர்சி (வயது54), மற்றும் அஜித் (வயது24) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படு காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
