ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அவ்வாறு விருது பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், ரூ.2 ஆயிரத்து 500 மதிப்பிலான வெள்ளிப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப் படியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், திருச்சி மாவட்டத்தில் 15 ஆசிரியர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரமேஷ்குமார், துவாக்குடி மலை (வடக்கு) தலைமை ஆசிரியர் கருணாம்பாள், எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருமாவளவன், நம்புக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்வகுமார், சுண்டக்காப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பவள்ளி, ஆரியக் கோன்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ராஜசேகர் உட்பட 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.