2022-23ம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கியது. இன்று துவங்கிய இந்த பொதுத்தேர்வானது 20-ம் தேதி முடிவடைகிறது. முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் ,சுயநிதி பள்ளிகள் என 448 பள்ளிகளில் பயிலும் 17,473 மாணவர்கள், 17,349 மாணவிகள் என மொத்தம் 34,822 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மாவட்டத்தில் தனித்தேர்வு மையங்களையும் சேர்த்து 173 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு துவங்கிய இந்த தேர்வானது மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. இந்த தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 100- க்கும் மேற்பட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அதிகாரிகள், நியமிக்கப்பட்டுள்ளனர்.
