தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 1 முதல் 22 ம் தேதி வரை 12 ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25 ம் தேதி வரை நடைபெற உள்ளன. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே பள்ளித் தேர்வுகள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 10 நாட்கள் முன்னதாக தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல, பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் முன்கூட்டியே நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் நிலையில், இந்தாண்டு மார்ச் மாதத்திலேயே தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு அதை அடிப்படையாகக் கொண்டு செமஸ்டர் தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.