Rock Fort Times
Online News

பிரபல சமையல் கலைஞர் ஷெஃப் தாமு காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி! 

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தார். அவரது மறைவு சமையல் கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் செஃப் தாமு. குறிப்பாக, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை பெற்றார். தனது நகைச்சுவையான பேச்சு, சமையல் மீதான ஆர்வம், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதம் என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

தாமுவின் சாதனைகளை பொறுத்தவரையில், கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்ந்து 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 வினாடிகளில் மொத்தம் 617 வகையான உணவுகளை தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். இதில் 101 வகையான சைவ, அசைவ உணவுகள் இடம்பெற்றிருந்தன. அவரது இந்த சாதனை சமையல் துறையில் அவருக்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியது. மேலும், சமையல் துறையில் பல்வேறு சாதனைகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான கலைமாமணி விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்