Rock Fort Times
Online News

திருச்சி – மலேசியா இடையே புதிய விமான சேவை…* வருகிற டிசம்பர் 16-ம் தேதி முதல் தொடக்கம்..! 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய நாட்டின் சுபாங் நகரில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திற்கு வருகிற டிசம்பர் 16-ம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி, புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுபாங் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி இரவு 10 மணிக்குப் புறப்படும் விமானம், இந்திய நேரப்படி இரவு 11-10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12-10 மணிக்குப் புறப்படும் இந்த விமானம், மலேசிய நேரப்படி காலை 6-35 மணிக்கு சுபாங் விமான நிலையத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நேரடி விமான சேவையால் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மலேசியா செல்லும் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மிகுந்த பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்