திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டில் திருச்சி கீழப்புதூர் ரோட்டை சேர்ந்த மனோ காளிதாஸ் (வயது 28) என்பவர், 2 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. அந்த பெண்களை மீட்ட போலீசார் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மனோ காளிதாஸை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ரூ.6 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.