Rock Fort Times
Online News

திருச்சி அருகே மோர் என நினைத்து பினாயிலை குடித்த பெண் பலி..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கல்லூர் அம்பேத்கர் ஞானநகர் பகுதியைச் சேர்ந்தவர் அரசன். இவரது மனைவி இந்திராணி. இவர்கள் திருப்பராய்த்துறை தபோவனத்தில் குடும்பத்துடன் தங்கி தோட்ட வேலைகளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்திராணி மோர் என நினைத்து ஒரு பாட்டிலில் இருந்த பினாயிலை தவறுதலாக குடித்து விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். மகன் சண்முகவேல் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்