திருச்சி, கொட்டப்பட்டு மொராய்ஸ் கார்டன் காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 36). இவரிடம் புதுக்கோட்டை குளத்தூர் குமாரமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த மோகன் என்பவர், தான் ஒரு பெரிய முதலீட்டு நிறுவனத்தில் ஏஜெண்டாக வேலை பார்ப்பதாக அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய மகேஸ்வரி, அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ. 8 லட்சத்து 300 அனுப்பி உள்ளார். அதன் பின்னர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பணம் கிடைக்காததால், மகேஸ்வரி திருச்சி ஜே.எம்.5 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில் பொன்மலை போலீசார் மோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.