Rock Fort Times
Online News

திருச்சியில் 17 பவுன் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய பெண் கைது…!

திருச்சி, பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைசேர்ந்தவர் ராபர்ட் சகாயதாஸ் (வயது 59).இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றார். அப்போது தனது நண்பர் பொன்னேரிபுரத்தைசேர்ந்த ஜெகதீசன் மனைவி மேரி என்பவரிடம் தங்க சங்கிலி, நெக்லஸ், தோடு, மோதிரம், வளையல் உள்ளிட்ட 17 பவுன் நகைகளை கொடுத்து வைத்திருந்தார். பின்னர் அந்த நகைகளை திருப்பி கேட்டபோது மேரி தரவில்லை. பலமுறை கேட்டும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து பொன்மலை குற்றப்பிரிவு போலீசில் ராபர்ட் சகாயராஜ் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிந்து மேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்