மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
இதன் காரணமாக அந்த மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அங்கு நிலைமை சீரடைந்து வரும் நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதலே மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில் இன்று காலை முதலே பனிமூட்டத்துடன் சாரல் மழையும் சேர்ந்து பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் ஊட்டி, கொடைக்கானல் போல குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
1
of 927
Comments are closed, but trackbacks and pingbacks are open.