தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருப்பதால் ஆட்சியை தக்க வைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மமக., மநீம உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. தேமுதிகவும், திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. நேற்றைய தினம் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திமுகவில் இணைந்தார். இதனால் திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக மாறி வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவிகிதத்தை கொண்டுள்ள எஸ்டிபிஐ கட்சியை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அக்கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் இன்று( பிப்.28) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய அக்கட்சி திமுக கூட்டணியில் இணையவுள்ளது. அந்த கட்சிக்கு 2 அல்லது 1 தொகுதியானது ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.