வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? மாறாதா? என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென்கிழக்கே சுமார் 310 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30ம் தேதி காலை காரைக்காலுக்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க கூடும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு முதல் நாளை காலை வரையிலான காலகட்டத்தில் தற்காலிக புயலாக வலுப்பெறக்கூடும்.அதன் பிறகு அது வலுவிழந்து கரையை கடக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
Comments are closed.