திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாசன் வேலியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் ( வயது 40). வெங்காய வியாபாரி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவர் மது குடித்துவிட்டு வந்து மனைவி தனலட்சுமியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தனலட்சுமி இன்று தனது உறவினர்களுடன் சேர்ந்து கணவரை அடித்துக்கொன்று சாக்கில் கட்டி ஆம்னி வேனில் எடுத்துச் சென்றபோது சோமரசம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை மனைவியே தீர்த்துக் கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.