Rock Fort Times
Online News

கேஸ் தட்டுப்பாட்டை தீர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லாதது ஏன்?* திருச்சியில் கனிமொழி எம்பி விளக்கம்!

திருச்சியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி இன்று(ஏப்ரல் 4) திருச்சி வருகை தந்தார். முன்னதாக ராஜா காலனி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்த அவர், பிரச்சாரத்திற்கு கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாட்டில் திமுகவுக்கு அதிக ஆதரவு உள்ளது. திமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு இடம்பெற்றுள்ளது. அதிமுக கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற போவதில்லை. அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முதலில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் கற்பனை விஷயங்களை பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். சொந்தப் பிரச்சனைக்கு டெல்லி செல்லும் முதல்வர், கேஸ் தட்டுப்பாடு பிரச்சினைக்கு ஏன் செல்லவில்லை என விஜய் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு டெல்லிக்கு சென்று வர வேண்டிய அளவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரச்சனை எதுவும் இல்லை. விஞ்ஞானம் முன்னேறி உள்ளது. இங்கிருந்து பிரதமருக்கு பேசக்கூடிய அளவிற்கு கடிதம், இ மெயில் உள்ளிட்ட தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. மேக் இன் இந்தியா என்று சொல்லும் மத்திய அரசு, சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி கவலை இல்லாமல் உள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் முறை இருந்ததால் தான் தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்