திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை ரோட்டையும், கோட்டை ஸ்டேஷனையும் இணைக்கும் மிக முக்கியமான வழித்தடமாக மாரிஸ் மேம்பாலம் இருந்து வந்தது. சுமார் 157 வருடங்களுக்கு முன்பு ரயில்வே துறையால் கட்டப்பட்ட இப்பாலம் வலுவிழந்த காரணததால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக பாலம் கட்டுவதற்கு ரூபாய் 34 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலையில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேயரிடம் மாரிஸ் பாலம் எப்போது திறக்கப்படும்? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய அவர் இதுகுறித்து கூறியதாவது., மாரிஸ் மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் சுமார் 60 சதவீதம் வரை முடிவடைந்து உள்ளது. மேம்பாலத்தினை இருவழிப் பாதையாக கட்டுவதினால் மெயின் கார்ட் கேட் பகுதியில் இருந்து தில்லை நகர், புத்தூர் மற்றும் உறையூர் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இன்றி சுலபமாக சென்று வர முடியும்.தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வழிவகை செய்யப்படும் என்றார். இந்த ஆய்வில் நகரப் பொறியாளர் பி.சிவபாதம், மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.