Rock Fort Times
Online News

2026 தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியை அதிமுக கோட்டையென நிரூபிப்போம் – அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாஜி மந்திரி விஜயபாஸ்கர் பேச்சு!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார். மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார்.  அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில்  திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் பேசுகையில், திமுக 520 பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. சிறுபான்மையினரையும்,வாக்களித்த பொதுமக்களையும் திமுக அரசு ஏமாற்றிவிட்டது.  திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 200 விழுக்காடு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்,  வருடத்திற்கு 6 விழுக்காடு சொத்து வரியை உயர்த்த திமுக அரசாணை வெளியிட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்த மிகப்பெரிய துரோகம் என்றார்.  இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசுகையில் ,  புரட்சி தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரது வழியில் எடப்பாடியாரது ஒற்றைத் தலைமையின் கீழ், நாம் அண்ணா திமுகவின் ஒரு அங்கம் என்று சொல்வதில் பெருமை அடைகிறோம்.   வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியின் உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்தவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு விதமானது. திருச்சி என்பது அதிமுகவின் கோட்டை.  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், பிரச்சாரத்துக்கு செல்லாமல், வாக்கு கேட்காமல், அதிமுகவை வெற்றிபெறச்செய்து, ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வந்தவர்கள் நமது தொண்டர்கள்.  மலைக்கோட்டை மாநகரத்தை, அதிமுகவின் எஃக்கு கோட்டையாக மாற்றுவதற்கான மனத் துணிவை அதிமுக தொண்டர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர்  கார்த்திகேயன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் என்ஜினீயர் இப்ராம்ஷா,மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முத்துக்குமார்,  மாவட்ட துணை செயலாளர் வனிதா, அவைத்தலைவர் ஐயப்பன், இலக்கிய அணி பாலாஜி,நசீமா பாரிக்,  அப்பாஸ், கலிலுல் ரகுமான், ராஜேந்திரன், வெங்கட், பிரபு,பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, சுரேஷ் குப்தா,ஏர்போர்ட் விஜி ,ரோஜர்,  புத்தூர் ராஜேந்திரன்,  கலைவாணன், எம்ஆர்ஆர்.முஸ்தபா,  கவுன்சிலர் அம்பிகாபதி, ஆரி,  வக்கீல்கள் முல்லை சுரேஷ், சசிகுமார், முத்துமாரி,சுரேஷ், ஜெயராமன், மற்றும் எனர்ஜி அப்துல் ரகுமான். அப்பாக்குட்டி, சிங்கமுத்து,காசிபாளையம் சுரேஷ் குமார், செபா, இன்ஜினியர் ரமேஷ் , நாட்ஸ் சொக்கலிங்கம்,தர்கா . காஜா,ஈஸ்வரன்,  ஆவின் குமார்,  டைமண்ட் தாமோதரன், நாகராஜ், ரஜினிகாந்த் , புத்தூர் சதிஷ்,எடத்தெரு பாபு,ரபீக்,பாலக்கரை ரவீந்திரன்,வாழைக்காய் மண்டி சுரேஷ் சகாபுதீன், ரமணிலால்,  கல்மந்தை விஜி, கேபி ராமநாதன், பொன்.அகிலாண்டம், ராமமூர்த்தி, ராஜ்மோகன், கதிர்வேல், ஜெகதீசன், சிங்கமுத்து, வெற்றி வீரன், குமார்,சிந்தாமணி கிருஷ்ணன்,ஈஸ்வரன்,சகாதேவன்,பிளாட்டோ,  வணக்கம் சோமு,ராஜேந்திரன்,நத்தர்ஷா மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

திருச்சி வந்த தமிழக ஆளுநருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..

1 of 881

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்