Rock Fort Times
Online News

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதை தடுக்க தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களியுங்கள்…திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேச்சு…

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி சுற்றியுள்ள பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட கூட்டணி கட்சியை நிர்வாகிகளுடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார். அப்போது துரைவைகோ கூறியதாவது:- ஒரு காலத்தில் திருச்சி மாவட்ட மக்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்த பெல் தொழிற்சாலை தற்போது நலிவடைந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள முக்கால்வாசி பொதுத்துறை நிறுவனங்களின் நிலை இதுதான். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார் மயமாக்க முயன்ற போது, வைகோ போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தினார்.

இதனால் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதை தடுக்க மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். மோடி மீண்டும் பிரதமரானால் பெல் நிறுவனம் கேள்விக்குறி ஆகிவிடும். இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும். எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதை தடுக்க தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார். பிரச்சாரத்தில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரன், மதிமுக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையாக மாவட்ட மதிமுக செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்