Rock Fort Times
Online News

சீமான் போட்டியிடும் காரைக்குடியில் விஜய் நாளை ( ஏப்.10) தேர்தல் பிரசாரம்…!

தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த போது அவருக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. அதனைத் தொடர்ந்து நாளை (10-04-2026) காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் டி.கே.பிரபு உள்பட மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். காரைக்குடி தேவர் சிலை அருகே பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. இதையொட்டி தேர்தல் கமிஷன் அதிகாரிகள், போலீஸ் அதிகாரி கள் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத். காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் புனியா மற்றும் அதிகாரிகள் குழுவினர் பிரசாரத்திற்கு அனுமதி கேட்கப் பட்ட தேவர் சிலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், காரைக்குடி தொகுதி வேட்பாளர் டி.கே.பிரபுவிடம் பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய், பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. காரைக்குடியில் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏறாமல் இருக்க டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் உயரமான மரங்களில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்