Rock Fort Times
Online News

புதுச்சேரியில் இன்று(ஏப்.4) விஜய் பிரச்சாரம்…* பிரச்சார வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என வேண்டுகோள்!

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நாள் நெருங்கி விட்டதால் முக்கிய தலைவர்கள் புதுவையை நோக்கி வந்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். அந்தவகையில், தவெக தலைவர் விஜய், புதுச்சேரியில் இன்று(04-04-2026) பிரச்சாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 1 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விஜய் சாலை மார்க்கமாக புறப்பட்டார். இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவரின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் பின்தொடரக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்