Rock Fort Times
Online News

சென்னை – திருப்பதிக்கு விரைவில் ‘வந்தே பாரத்’ ரெயில்…

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்நிலையில், சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- வந்தே பாரத்  ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 27-ம் தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் – திருப்பதி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால், வாரியத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான ஒப்புதல் கிடைக்கவில்லை, சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே அதிகபட்சமாக மணிக்கு130 கி.மீ. வேகத்தில் செல்ல ரயில் பாதைகள் தயாராக உள்ளன. ரயில்வே வாரியம் ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னை – திருப்பதி வந்தே பாரத் ரயிலுக்கான கால அட்டவணை, கட்டணம், பயண நேரம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்