Rock Fort Times
Online News

இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு…- ஒத்திவைத்தது அமெரிக்க அரசு..!

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பு இன்று ( ஆகஸ்ட் -1 ) முதல் அமலுக்கு வரை இருந்த நிலையில், இதனை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை ஆகஸ்ட் 1 தேதியான இன்று முதல் அமல்படுத்த அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இது குறித்த ஒத்திவைப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இது குறித்து அவர் ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில்., இந்தியா நமது நல்ல நண்பன். கடந்த சில ஆண்டுகளாக நாம் அவர்களுடன் சிறு வர்த்தகம் செய்து வருகிறோம். உலக அளவிலேயே இந்தியா தான் அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகிறது. அதேபோல ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் ராணுவப் பொருட்களை இந்தியா வாங்கி வருகிறது. மேலும் ரஷ்யா, சீனாவிடமிருந்து எரிபொருட்களையும் கொள்முதல் செய்து வருகிறது. உக்ரைனில் பொதுமக்களை ரஷ்யா கொன்று குவிப்பதை தடுக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பும் வேளையில், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகிறது. இது எல்லாம் நல்லதுக்கு அல்ல. இந்தியாவுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீத கூடுதல் அபராத விதி விதிக்கபடும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த வரி விதிப்பு உத்தரவை ஆகஸ்ட் 7க்கு ஒத்திவைத்து அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்