மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து, வரும் 12-ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்தது, நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டம், விவசாயிகளை பாதிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் போன்றவை காரணமாக மத்திய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அனைத்து மாநகரங்களிலும், மற்றும் கழக/நகர/பேரூர் அளவிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.3458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ.3112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காமல், வளர்ச்சி திட்டங்களுக்கு ஒரு பைசா கூட ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்துள்ளது பாஜக அரசு. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிப்பத்திர சட்டத்தை சிதைத்து நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் முயற்சியும், அமெரிக்கா சார்ந்த விவசாய பொருட்களை இறக்குமதி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒப்பந்தமும், மத்திய பாஜக அரசின் கையால் மேற்கொள்ளப்படுகிறது. இதனை எதிர்த்து, அனைத்து திமுகவினர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.