Rock Fort Times
Online News

திருச்சி, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் இளைஞர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்…* வருகிற 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது!

திருச்சி, திருப்பராய்த்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், சுவாமி சித்பவானந்தரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனமாகும். இங்கு கல்வி, ஒழுக்கம் மற்றும் ஆன்மீக மதிப்புகளைப் புகட்டுவதோடு, அப்பகுதியில் பல கல்வி நிறுவனங்களையும் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் மற்றும் விவேகானந்த வித்யாவன உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 17-04-2026 முதல் 21- 04-2026 வரை 5 நாட்கள் இளைஞர்களுக்கு ஆளுமை மற்றும் பண்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வருகிற 17ம் தேதி ‘ஆன்மீகத்தில் அறிவியல்’ என்கிற தலைப்பில் டாக்டர்.வி.பார்த்த சாரதியும், 18-ம் தேதி ‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிற தலைப்பில் டாக்டர்.மணி பிரகஸ்பதியும், ‘உன்னை அறிந்தால்’ என்கிற தலைப்பில் டாக்டர்.பி.பாஸ்கரனும், ‘சுவாமி சித்பவானந்தரின் தூய்மையும் தொண்டும்’ என்கிற தலைப்பில் பி.தனசேகரனும், தேசபக்தி’ என்கிற தலைப்பில் பி.செல்வகுமாரும், ‘ஆரோக்கியம் நம்மிடமே’ என்கிற தலைப்பில் டாக்டர் இளங்கோவனும், ‘நேர நிர்வாகத்துடன் தலைமைத்துவம்’ என்கிற தலைப்பில் இன்ஜினியர் கே.நாகப்பனும்,
‘விவேகம்’ என்கிற தலைப்பில் என்ஜினியர் கே.ராம கணேசன் மற்றும் நாகராஜன் வடிவேல் சேதுபதியும், ‘வெற்றிச் சூத்திரம்’ என்கிற தலைப்பில் க.சிவகுருநாதனும் உரையாற்றுகிறார்கள். இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை. 30 வயதிற்கு உட்பட்ட 10, 12 மற்றும் பட்டம் முடித்த ஆண்கள் மட்டும்
விண்ணப்பிக்க வேண்டும். உணவு, இருப்பிடம் இலவசம். உடை, பெட்சீட் கொண்டு வர வேண்டும். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் வருகிற 15-04- 2026-க்குள் 94438 60656 மற்றும் 97861 88160 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு வருகிற 15-04 2026-க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் வந்து விட வேண்டும். பொருந்தாத பழக்கவழக்கம் உடையவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்