Rock Fort Times
Online News

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீசார் இருவர் பணியிட மாற்றம்…!

“ஆபரேஷன் சிந்தூர்” வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்தநிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் சின்னச்சாமி, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் மந்திரம் ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீஸ்காரர்கள் சின்னச்சாமி, மந்திரம் ஆகிய 2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்ததாக போலீஸ்காரர்கள் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்