திருச்சி பாலக்கரை தருமநாதபுரம் பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக பாலக்கரை போலீசுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பொதுகழிப்பிடம் பகுதியில் கஞ்சா விற்றதாக அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் அந்தோணி, ராஜேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினா், அவர்களிடம் இருந்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.