நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, இன்று ( ஏப்.4 ) திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சந்திரா தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்ட இணை செயலாளர் சிவா, பொருளாளர் பாபு, துணைச் செயலாளர் சாந்த ஷீலா, ஆனந்த், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், பகுதி, ஒன்றியம், பேரூராட்சி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.