திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகர் சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் சந்துருகுமார் (வயது 44). இவர் தனது நண்பருடன் மது குடிப்பதற்காக மதுக்கடைக்கு சென்றார். அப்போது , அதே தெருவை சேர்ந்த சூர்யா, நேருஜி நகரை சேர்ந்த யோகேஸ்வரன், யுவராஜ், ராகுல் ஆகிய நான்கு பேரும் தங்களுடன் வந்து மது அருந்துமாறு சந்துருகுமாரை அழைத்துள்ளனர். அவர் வர மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சூர்யாவும், யோகேஸ்வரனும் சேர்ந்து சந்துருகுமாரை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க வந்த அவரது மகன் முருகானந்தத்துக்கும் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சந்துரு குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிந்து சூர்யா, யோகேஸ்வரன், ராகுல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவான யுவராஜை தேடி வருகின்றனர். தந்தை, மகன் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.