திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே நெல்லிப்பட்டியை சேர்ந்தவர் சின்னகருப்பன் என்கிற சிவக்குமார் (வயது 32). இவர் கடந்த 2020- ம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னகருப்பன் என்கிற சிவக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சின்னகருப்பன் என்கிற சிவக்குமாருக்கு 4 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று திருச்சி மகிளா கோர்ட்டு அமர்வு நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் ஜாகீர் உசேன் வாதாடினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.