மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…!
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று(27-07-2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் நடந்தது. கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் பேசுகையில், ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்து நாடு முழுவதும் சமசீரான வளர்ச்சியே உருவாக்கி கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாக இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதி நிலையை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்கள் மட்டுமே நிதி நிலையை தாராளமாக அளித்து விட்டு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலம் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைத்திருக்கிறது என்றார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், மாவட்ட அவைத் தலைவர் சபியுல்லா, மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா, பகுதி செயலாளர்கள் மருந்து கடை மோகன், ஆர்.ஜி.பாபு, கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், டி.பி.எஸ்.எஸ்.ராஜ் முஹம்மது, மணிவேல், ஏ.எம்.ஜி.விஜயகுமார் , நீலமேகம், சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.கே.கே.கார்த்திக், மணிமேகலை ராஜபாண்டி, ராஜேஸ்வரன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கயல்விழி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் வாசவி சரவணன், தொண்டரணி கேபிள் தினகரன், மீனாட்சி சுந்தரம், கவுன்சிலர்கள் கொட்டப்பட்டு ரமேஷ், சாதிக் பாஷா,வட்டச் செயலாளர்கள் சுருளிராஜன், மணப்பாறை வக்கீல் கிருஷ்ணகோபால் மற்றும் மாநில, மாவட்ட , மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,
கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.