தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 5 பொது மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பொது மேலாளர் சி.கே.ராகவன், கடலூர் மண்டலத்துக்கும், வேலூர் மண்டல பொது மேலாளர் ஜெ.எட்வின் சாமுவேல், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கும், கடலூர் மண்டல பொது மேலாளர் எஸ்.ராஜா, நாகப்பட்டினம் மண்டலத்துக்கும், ஈரோடு மண்டல பொது மேலாளர் கே.ஸ்வர்ணலதா, உதகை மண்டல பொது மேலாளர் ஏ.கணபதி, வேலூர் மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், துணை மேலாளர் பொறுப்பில் உள்ள 7 பேருக்கு முதுநிலை துணை மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள் பொது மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை போக்குவரத்துக் கழக தொழில்நுட்பப் பிரிவு பொது மேலாளராக வி.கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி மண்டல பொது மேலாளராக பி.பாலசுப்பிரமணியன், விழுப்புரம் மண்டல பொது மேலாளராக டி.சதீஷ்குமார், சேலம் போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பிரிவு பொது மேலாளராக எஸ்.கலாவதி, திருப்பூர் மண்டல பொது மேலாளராக வி.சிவக்குமார், மதுரை மண்டல பொது மேலாளராக பி.மணி, காரைக்குடி மண்டல பொது மேலாளராக எஸ்.பி.கந்தசாமி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed.