Rock Fort Times
Online News

திருச்சி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் சந்திப்பு: அரசு பணி வழங்க கோரிக்கை…!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை  மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.  விமான நிலையத்தில் அமைச்சரை, திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ராஜேஸ்வரி, பாலமுருகன், விமான நிலையம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா உள்ளிட்ட விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் சந்தித்தனர். அப்போது அவர்கள்  பளுதூக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய அரசு வழங்குவது போல தமிழகத்திலும் அரசுத் துறைகளில் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை மனுவாக கொடுங்கள், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.  அப்போது,  தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  அமைச்சரை சந்தித்த வீரர்- வீராங்கனைகள் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்