திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் – * முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று ஆலோசனை…!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜேகே நகர் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சாவூர் மண்டல செயலாளர் அறிவொளி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இதில், மாவட்ட கழக இணை செயலாளர் எ.ஜாக்குலின், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்பிரபு, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் தென்னூர் கே.அப்பாஸ், பகுதி கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.