Rock Fort Times
Online News

திருச்சி: அதி வேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுனருக்கு அபராதம்…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வழியாக ஸ்ரீரங்கத்திற்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்தப் பேருந்து
திருச்சி மேலப்புதூர் சிக்னல் அருகே அதி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதை கவனித்த போக்குவரத்து போலீசார், அந்த பேருந்தை மேலப்புதூர் அருகே நிறுத்தி அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் எதற்கு அதிக வேகமாக வந்தீர்கள் என்று கேட்டதுடன் , அதன் ஓட்டுனருக்கு ரூ.1000 அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர். மேலும் அந்த பஸ்ஸில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒழிப்பான் அகற்றப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்