தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மட்டுமல்லாது இந்தியா முழவதும் வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருச்சி அண்ணாசிலை அருகே போராட்டம் நடத்தினர். விவசாயிகள் பட்டை நாமத்துடன் காலி மண் குடத்துடன் கலந்து கொண்டதோடு மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு, மதுரை ஏ.சி.காமராஜ் கனவு திட்டமான நதிகளை இணைத்து நீர்வழிச்சாலையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேம்டூரிலிருந்து வடபுறம் கால்வாய் வெட்டி அய்யாற்றுடன் நீலகண்டபுரம் திருச்செங்கோடு சரபங்காநதி, திருமணிமுத்தாறு நாமக்கல் வழியாக அய்யாறு உப்பாற்றுடன் தளுகை ஆற்றுடனும் இணைப்பதே நீர்வீழிச்சாலை கனவுத்திட்டம். இதன் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூh, கடலூர் மாவட்டங்களில் 2 கோடி விவசாயிகளை காப்பாற்ற முடியும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு, நாகை தனபாலன், தீட்சதர் பானு மேகராஜ் முத்துசாமி, சிவகுமார் ஜான்மைகில் பரமசிவம், தட்சிணாமூர்த்தி, கார்த்திக்,அரியலூர் பாண்டியன், தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
