திருச்சிராப்பள்ளி வளர்ச்சி பணிக்காக சமூக சேவை சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பாக திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம் பல்வேறு கோரிக்கையினை தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்களை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவ்வகையில் திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழும தலைவர் வழக்கறிஞர் திருச்சி திலீப், செயலாளர் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் பிளட் ஷாம், திருச்சி மாநகராட்சி மன்ற உறுப்பினர் எல்.எக்ஸ்,கருமண்டபம் ராஜ்குமார், வழக்கறிஞர் கண்ணன், துணைச் செயலாளர் ரமேஷ், லிவிங்ஸ்டன், தாஸ், குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் பூபாலன், ஷேக் அப்துல்லா, திருப்பதி, சீனிவாசன் மற்றும் அம்பிகாபுரம் கார்த்திக் உள்ளிட்டோர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை சந்தித்து திருச்சி வளர்ச்சிக்கான கோரிக்கையினை அளித்தனர்.

Prev Post