Rock Fort Times
Online News

போலீஸ் ரோந்து வாகனங்களை திருச்சி மாநகர கமிஷனர் ஆய்வு…!

திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்படும் போலீசாரின் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெடிகுண்டு தடுப்பு பிரிவில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள், ரோந்து வாகனங்கள், ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் திருச்சி மாநகர காவல் நிலையங்களில் உள்ள வரவேற்பாளர்களுடன் கலந்துரையாடி, பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்த புகார் வந்தாலும் உடனடியாக கணிப்பொறியில் பதிவு செய்து அவர்களது குறைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

 

இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களிடம், 100-க்கு அழைப்பு வந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று புகார்தாரர்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் காவல் ஆணையர், மாநகர ஆயுதப்படை காவல் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்