Rock Fort Times
Online News

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய முனைவர் பட்ட இணையவழி நுழைவுத் தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு – மாணவ, மாணவிகள் அவதி…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024-வது கல்வி ஆண்டுக்கான முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகையான பாடப்பிரிவுகளில் 1092 மாணவ, மாணவிகள் ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை 11 மணி முதல் பகல் 12.15 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வாளர்களுக்கு தேர்வெழுத பிரத்யேக லாகின் மற்றும் ரகசிய குறீயீடு உள்ளிட்டவைகளும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தேர்வு எழுத மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாகின் செய்தனர். ஆனால், பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால், ஏராளமான மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாயினர். தொடர்ந்து பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாச ராகவன் கூறுகையில், முனைவர் பட்டத்துக்கான இணைய வழி தேர்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்