Rock Fort Times
Online News

செந்தில் பாலாஜியின் வெற்றியை எதிர்த்து வழக்கு சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி..!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 59,724 வாக்குகள் பெற்று, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். கோவை தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் வெற்றியை எதிர்த்து ஈரோட்டை சேர்ந்த பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தியிருந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை -10) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு வாக்காளர் எந்தத் தொகுதி தேர்தலையும் எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. எந்தவொரு தொகுதி தேர்தலை எதிர்த்து யார் வேண்டுமாலும் வழக்கு தொடர அனுமதித்தால், ஒவ்வொரு தேர்தலுக்கும் பிறகு ஏராளமான தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை உருவாகும். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த மனுதாரர், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரும் அல்ல, வாக்காளரும் அல்ல என கூறி, செந்தில்பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்