திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் சிக்கிய 7 பேரும் உயிரிழப்பு…! ( வீடியோ இணைப்பு )
புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதி கன மழை பெய்தது. மழை காரணமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்து, வ.உ.சி.நகர் தெருவில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது. இதில் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி தவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் 2-வது நாளாக இன்று(02-12-2024) மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தன. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், 7 பேரை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் எஸ்.பி சுதாகர் ஆகியோரும் முகாமிட்டு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். இருந்தாலும் மண்ணில் புதைந்த 7 பேரையும் உயிருடன் மீட்க முடியவில்லை. அவர்களை சடலமாக தான் மீட்க முடிந்தது. மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே நேரத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.