சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள்…!
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கல்லூரி மாணவிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் பேரணியாக சென்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், அனைவரும் போக்குவரத்து விதிமுறை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில், நடராஜன் மற்றும் போக்குவரத்து துறையினர், ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.